Search This Blog

Tuesday, April 14, 2026

சிறந்த இசை


வீசும் காற்று விழும் துளிகளை

வீழ்த்தி விலகி சென்றது

ஒருவன் இறைவனின் முன்

நின்றான் சிறிய கேள்வியுடன்


சிறந்த இசையின் கேள்விக்கு

தாயின் தாலாட்டும் குயிலின்

குரலும் மழையின் சாரல்

ஓசையும் பதிலாகக் கிடைத்தது.


பள்ளி நேரம் முடியும்போது

ஒலிக்கும் மணியை பதிலாக

எதிர்பார்த்த அவனோ

இறைவனிடம் நின்றான்.


மழையின் துளிகள் நின்றன

புயல் தென்றலாய் மாறியது 

முதல் முறையாக அமைதியை

இசை எனக் கேட்டு மகிழ்ந்தான்.


 - அருண் குமார் முத்தழகன்


எனது ஆங்கில கவிதை படைப்புகளுக்கு கீழே உள்ள இணையதளத்தைப் பார்வையிடவும் 

ஏகே கவிதைகள்


Tuesday, April 7, 2026

கொட்டு முரசே

 

சுதந்திரக் காற்று வீசும் நாட்டின்

கல்லூரியில் படிக்கும் மாணவன்

வளமான தேசத்தைப் பற்றி எழுதுவது



சுவரொட்டிகள் அலங்கரித்த பேருந்துகள்

பராமரிப்புக்கு ஏங்கும் உயிர்கள்

சத்தம் நிறைந்த வீடுகள்

என ஆயிரம் குறைகள்



கண்களோடு இருட்டில் வாழும்

கிராமத்து வயலின் விவசாயிகள்

வேலை தேடும் திறமைசாலிகள் 

என அப்பாற்பட்ட மனிதர்கள்



ஆனால் இந்தியன் என்ற உணர்வு 

அனைவரையும் ஒன்றாக மாற்றுகிறது

தேசிய கொடியை மேலும் உயர்த்திய

இந்த நாட்டின் அடையாளங்களுக்காகவும்



எல்லைகளை குடும்பங்களின் நினைவோடு

காத்து இறந்த பின்னரும் தனது

குடும்பம் தன் மக்களைக் காக்கும்

என்ற புனிதர்களுக்காகவும் 

முரசே நீ கொட்டுவாயா???



-  அருண் குமார் முத்தழகன்


எனது ஆங்கில கவிதை படைப்புகளுக்கு கீழே உள்ள இணையதளத்தைப் பார்வையிடவும் 

ஏகே கவிதைகள்


என் பார்வையில் கலாம்

 

கடல் சூழ்ந்த நிலத்தில்

சொந்தம் சூழ வளர்ந்து

புகழ் சூழ இறைவனை

அடைந்த மாமனிதரின் கதை


சிறுவனாக பல நேரம் 

அனைவரும் சமம் என்று

தோழர்கள் ‌முதல் ஆசிரியர்கள் வரை

மனிதனாக உயர்ந்து நின்றார்.


வளரும் காலத்தில் விற்ற

செய்தித்தாள்களில் தன் 

வெற்றிகளையும் செய்திகளாக

மாற்றி ஊக்கம் அளித்தார்.


இயற்பியல் மாணவராக 

விமானங்கள் மீதான ஆசையில்

நூலிழையில் வீழ்ந்த பின்னும் 

இராணுவ ஹெலிகாப்டரை உருவாக்கினார்.


செயற்கைக்கோள் தொடங்கி

பொக்ரான் சோதனை வரை 

இந்தியாவை உலகளவில்

வல்லரசாக மாற்ற உழைத்தார்


விருதுகள் குவிந்த வண்ணம்

ஒருமனதாக மக்களின் 

குடியரசுத் தலைவராக

நேர்மையாக இருந்தார்.


தூக்கம் இல்லாமல் கனவு, 

தற்செயல் இல்லாமல் திறமை, 

கையொப்பம் இல்லாமல் ஆட்டோகிராப்‌, 

இறப்பு இல்லாமல் சரித்திரம் போல


வாக்கியங்கள் பொன் மொழிகளாய்

மாற முடியும் என்ற நம்பிக்கையில் வரும் 

வாக்கியங்களில் கவிதையாய் வாழ்கிறார்

என் பார்வையில் கலாம் 


-  அருண் குமார் முத்தழகன்


எனது ஆங்கில கவிதை படைப்புகளுக்கு கீழே உள்ள இணையதளத்தைப் பார்வையிடவும் 

ஏகே கவிதைகள்


மழை சிலையானால்

 

அழகிய இயற்கை பூங்காவில்

இங்கும் அங்குமாய் கண்முன்னே

இயற்கையோடு குப்பைகளும்

ஒன்றாக காட்சி அளித்தன


மழை நீர் பாதையை உருவாக்கியது

கப்பல் போன்ற காகிதங்களுக்கு

மழை ஆசை மறையவில்லை

தள்ளாடும் நிலையற்ற முதியவருக்கு


சிலைகள் நனைய ஆரம்பித்தன

குடையும் மரமும் சோகமாக

அழுவதற்கு தலை குனிந்தன

பல்வேறு உயிரினங்களுக்காக


மாலையைப் பெற்ற சிலையை

மழை அழகாக சுத்தம் செய்கிறது

இம்முறை அதற்கு சக்தி இல்லை

மக்களின் மனங்களை தூய்மைப்படுத்த


-  அருண் குமார் முத்தழகன்


எனது ஆங்கில கவிதை படைப்புகளுக்கு கீழே உள்ள இணையதளத்தைப் பார்வையிடவும் 

ஏகே கவிதைகள்


ஒரு நாள் பார்வை

 

ஒரு ஊர்ல ஒரு ராஜா 

என தொடங்கும் கதைகள்

ஒருவனின் ஆழ்ந்த உறக்கத்தை 

சுலபமாக பறித்து சென்றது.


சிறு தூரம் நடந்தவன்

மரத்தின் நிழலில் உறங்கினான்

உடைந்த கண்ணாடி பகுதிகளும் 

மண்புழுக்களும் காவல் காத்தன.


மறையும் சூரியனின் கீழ்

குயிலின் குரல் கூட தாலாட்டு

இவையெல்லாம் தாண்டி அவன் விழித்தால்

அந்த கற்பனை ராஜாவை பார்க்க

ஒரு நாள் பார்வை கிடைக்குமா?


-  அருண் குமார் முத்தழகன்


எனது ஆங்கில கவிதை படைப்புகளுக்கு கீழே உள்ள இணையதளத்தைப் பார்வையிடவும் 

ஏகே கவிதைகள்